எங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டால் கூட்டணிக்கு தயார்: டிடிவி.தினகரன் ‘தமாஷ்’

சென்னை: எங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டால் கூட்டணிக்கு தயார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் நேற்று டிடிவி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கூட்டணி குறித்து சில முக்கிய கட்சிகளுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். இறுதி முடிவு வந்ததும் அதுகுறித்து அறிவிப்பேன். யார் வந்தாலும் அவர்களுடன் பேச தயார். தேர்தலில் சசிகலாவின் பங்கு என்னவாக இருக்கும் என்பதை அவர் தான் தெரிவிப்பார். எங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டு கூட்டணி வைக்க வரும் கட்சிகளை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று அதிமுகவை மீட்டெடுப்போம்.

10.5 சதவீத இடஒதுக்கீட்டில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும். அண்ணன், தம்பியாக வாழக்கூடிய சமுதாய மக்களை அவர்களுக்குள் சண்டையை உருவாக்கி ஒரு அறிவிப்பை கொடுத்திருப்பதாக தான் அனைவரும் நினைக்கிறார்கள். இந்த அறிவிப்பு எல்லாம் தவறு செய்தவர்களின் தலைமேல் இடி இறங்குவது போல் இறங்கப்போகிறது. எங்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஒவ்வொரு கட்சியினருடனும் கூட்டணி குறித்து பேசி வருகிறார்கள். ஒரு முடிவு கிடைத்தவுடன் அதுகுறித்து தெரிவிப்பேன். இவ்வாறு கூறினார்.

Related Stories: