நீட் பாதிப்பு பேரணிக்கு அனுமதி கேட்டு அனிதா அண்ணன் வழக்கு

மதுரை:  அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே குளுமூரைச் சேர்ந்த மணிரத்தினம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் தங்கை அனிதா. மருத்துவராக வேண்டும் என்ற அவரது கனவு நீட் தேர்வால் பாதித்தது. இதனால் தற்கொலை செய்தார். இதனால், கல்வி உரிமை பாதிப்பு, கல்வி திட்டத்திற்கான மேம்பாடு மற்றும் மருத்துவ கல்வி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.  இதை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் சென்னை வரை கல்வி உரிமை மற்றும் விழிப்புணர்வுக்கான சைக்கிள் பேரணியை நடத்த முடிவு செய்து, போலீசில் அனுமதி கேட்டு விண்ணப்பித்தேன். அனுமதி மறுத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

இதே காலகட்டத்தில் பிற அமைப்பினரின் பொதுக்கூட்டங்களுக்கு ேபாலீசார் அனுமதித்துள்ளனர். எனவே, எனது சைக்கிள் பேரணிக்கு அனுமதி மறுத்த கன்னியாகுமரி போலீசாரின் உத்தரவை ரத்து செய்து, சைக்கிள் பேரணிக்கு அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஆர்.ஹேமலதா, மனுவிற்கு கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி, நாகர்கோவில் டிஎஸ்பி, கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.7க்கு தள்ளி வைத்தார்.

Related Stories: