வேதாரண்யம் அருகே ஆம்புலன்சில் 50 லட்சம் கஞ்சா பறிமுதல்: சென்னையை சேர்ந்த 4 பேர் கைது

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை பகுதிக்கு கஞ்சா கடத்தி வருவதாக தஞ்சை கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு தோப்புத்துறையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து வந்த ஒரு தனியார் ஆம்புலன்ஸை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரணை நடத்தினர். நோயாளி ஒருவர் படுத்திருந்தார். அருகில் இருவர் அமர்ந்து இருந்தனர். இதில் அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் சோதனை நடத்தினர். பதப்படுத்தபட்ட உயர்ரக ஏற்றுமதிக்கான கஞ்சா 28கிலோ இருந்ததும், இதன் மதிப்பு 50லட்சம் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து ஆம்புலன்சில் இருந்த சென்னை அயனாவரத்தை சேர்ந்த ராஜ்குமார், மகேந்திரன், விக்னேஷ், சுந்தர் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதுதொடர்பாக அவர்களிடம் நடத்திய விசாரணையில், கஞ்சா பொட்டலங்களை சென்னையில் இருந்து வேதாரண்யத்துக்கு கடத்தி வந்து அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கொண்டு செல்லவிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Related Stories: