காஜியாபாத் எல்லை திறந்து மூடல்

புதுடெல்லி: டெல்லி காஜியாபாத் எல்லை மீண்டும் திறந்து மூடப்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து செப்டம்பர் மாதம் முதல் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் சிங்கு, திக்ரி, காஜியாபாத் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அந்த வழியாக செல்லும் சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து மாற்று வழியில் திருப்தி விடப்பட்டன. நேற்று திடீரென காஜியாபாத்தில் உள்ள என்எச் 9 சாலை திடீரென திறந்து விடப்பட்டது. அந்த சாலையின் ஒருபகுதி மட்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இதனால் டெல்லியில் இருந்து வாகனங்கள் வந்தன. காலையில் இருந்து வாகனங்கள் அந்த வழியாக இயக்கப்பட்டன. ஆனால் பிற்பகலில் சாலை மீண்டும் மூடப்பட்டது.

Related Stories:

>