பெட்ரோல், டீசல் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு பாஜ தலைமையகம் நோக்கி காங்கிரசார் பேரணி

புதுடெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பாஜ தலைமையகம் அருகே போராட்டம் நடத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதிலும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தாறுமாறாக எகிறியுள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.91.17 க்கும் டீசல் ரூ.81.47 க்கும் விற்பனைாயகிறது. கடந்த சில தினங்களாக பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து டெல்லி மாநில காங்கிசார் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜ தலைமையிலான மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பியவாறு காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து பாஜ தலைமையகம் நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது, டிடியு மார்க் பகுதிக்கு செல்லும் முன்பாகவே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்லி மாநில காங்கிரசின் துணைத் தலைவர் அபிஷேக் தத், சிவானி சோப்ரா, ஜெய்கிஷண், முதித் அகர்வால், மற்றும் அலி மெகந்தி மட்டுமின்றி மகிளா காங்கிரஸ் தலைவர் அம்ரிதா தவான் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>