கார் மோதி பெண் தொழிலாளி பலி: பல் டாக்டர் கைது

பூந்தமல்லி: கார் மோதி, பெண் கட்டிட தொழிலாளி, பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக பல் டாக்டரை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பிஜி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் சரோஜா (48) கட்டிட தொழிலாளி. நேற்று காலை சரோஜா, பெருங்களத்தூரில் நடக்கும் கட்டுமான வேலைக்கு புறப்பட்டார். இதையொட்டி போரூர் அருகே  தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையை கடக்க முயன்றார். அப்போது மதுரவாயல் நோக்கி வேகமாக வந்த கார், சரோஜா மீது வேகமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த பல் டாக்டர் ஜெயச்சந்திரன் என்பவரை கைது செய்தனர்.

Related Stories:

>