கொரோனா தடுப்பூசிக்கு அதிக கட்டணம் வசூலிக்க கூடாது: சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை: தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறியதாவது: முதியவர்கள் மற்றும் இணை நோய் பாதிப்புள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பி வருகிறது. பொதுமக்களுக்காக கோவின் 2.0 செயலில் (COWIN 2.0 APP) உருவாக்கப்பட்டுள்ளது. அந்த செயலில் பதிவு செய்துவிட்டும் வரலாம். பதிவு செய்ய தெரியாதவர்கள் ஆதார் அட்டை, ஓய்வூதிய அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை என ஏதாவது ஒரு அடையாள அட்டையுடன் அருகில் உள்ள தடுப்பூசி மையத்துக்கு சென்றால், அங்குள்ளவர்கள் செயலில் பதிவு செய்து தடுப்பூசியை போடுவார்கள்.

இணை நோய் பாதிப்புள்ளவர்கள் மட்டும் மருத்துவரின் சான்றிதழுடன் வரவேண்டும். அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடும் தடுப்பூசியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்துள்ள 250 கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: