இங்கி. வீரர்களுக்கு விவியன் ரிச்சர்ட்ஸ் அறிவுரை

ஆண்டிகுவா: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர். இதுகுறித்து வெஸ்ட் இண்டீசின் முன்னாள் அதிரடி வீரர்  விவியன் ரிச்சர்ட்ஸ் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் ஆடப்படும் டெஸ்ட் போட்டிகள் பற்றி எனக்கு கேள்வி எழுப்பப்பட்டது. இந்தியா என்றால் ஸ்பின், அது ஸ்பின் மண், இந்தியா சென்றால் இப்படித்தான் பிட்ச் இருக்கும் என்று தெரியாதா, அதற்கு தக்கவாறு தயாரிப்பில்தான் இருக்க வேண்டும். இது இங்கிலாந்துக்கு தங்கள் பேட்டிங் குறைபாடுகளைக் களைந்து கொள்ள நல்ல நேரம்.

4வது டெஸ்ட்டுக்கும் இதே பிட்ச்தான் போடுவார்கள். நான் இருந்தாலும் இதே பிட்சைத்தான் கேட்பேன். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் உலகின் அனைத்துப் பிட்ச்களிலும் இப்போது விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெறவில்லையா? இப்போது இந்தியாவில் இருக்கிறீர்கள் எனவே அங்கு என்ன நமக்கு அளிக்கப்படும் என்பதை தெரிந்து அதை எதிர்கொள்ள வழி தெரிந்திருக்க வேண்டாமா?

உங்களை யார் அழகாக மரபான ஆட்ட முறையில் ரன் எடுக்க வேண்டும் என்று வற்புறுத்துவது, இந்திய ஸ்பின்னர்களை அடித்து நொறுக்க வேண்டியதுதானே. ஆக்ரோஷமாக ஆடுங்கள். புலம்பல்கள் நிறுத்தப்பட வேண்டும், இந்தியா பயன்படுத்தும் ஆயுதங்களில் கிளாசிக்காக எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. நான் இருக்கும் இடத்திலிருந்து பார்க்கும் போது அது நன்றாகவே உள்ளது, என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>