வேலை வாங்கி தருவதாக பண மோசடி: அண்ணா பல்கலை. துணைப்பதிவாளர் கைது

சென்னை: வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த புகாரில் அண்ணா பல்கலை. துணைப்பதிவாளர் பார்த்தசாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணா பல்கலை.யில் வேலை வாங்கி தருவதாக ரூ.3.28 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. விக்னேஸ்வரன் உள்ளிட்ட 25 பேரிடம் போலி பணி நியமன ஆணைகளை வழங்கியதால் கைது செய்யப்பட்டார்.

அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் சூரப்பா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டதிலிருந்து அண்ணா பல்கலைகழகம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அண்ணா பல்கலை.யில் வேலை வாங்கி தருவதாக பல்கலைகழக துணை பதிவாளர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

அண்ணா பல்கலைகழக துணை பதிவாளர், பல்கலைகழகத்தில் வேலை வாங்கி தருவதாக 25 பேரிடம் சுமார் 25 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>