ஆம்புலன்ஸ் மூலம் ரூ.50 லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்தல்: 4 பேர் கைது

சென்னை: வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்த முயன்ற சென்னையை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்றை நிறுத்தி சோதனை செய்த போலீசார் அப்போது ஆம்புலன்சில் 28 கிலோ பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை பறிமுதல் செய்த போலீசார் சென்னை அயனாவரம் மற்றும் வில்லிவாக்கத்தை சேர்ந்த ராஜ்குமார், மகேந்திரன், விக்னேஷ், சுந்தர் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சா பொட்டலங்கள் சென்னையில் இருந்து வேதாரண்யத்திற்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கடத்தி வரப்பட்டு அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கொண்டு செல்ல இருந்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

Related Stories:

>