×

கடந்த 7 வாரங்களில் இல்லாத அளவு தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: பாதிப்பு எண்ணிக்கை 11.49 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11.49 கோடியை தாண்டியது. சீனாவின் உகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு வருடங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.46 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 114,986,803 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 90,695,679 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 25 லட்சத்து 49 ஆயிரத்து 725 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 21,741,399 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 90,183 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் லேசான அறிகுறிகளுடன் 21,651,216 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Corona proliferation is currently at an all-time high of 7: the number of victims has crossed 11.49 crore
× RELATED தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமியை...