3 மாதங்களில் 225 உயர்வு: காஸ் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை:. டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான இந்த மூன்றே  மாதத்தில் சமையல் எரிவாயு விலை ரூ.225 உயர்த்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல், டீசலுக்கு விலை நிர்ணயம் செய்வதைப் போன்று, சமையல் எரிவாயு உருளைக்கும் நாள்தோறும் விலையை தீர்மானிக்கும் வகையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி, மக்களைச் சூறையாடி வருவது கடும் கண்டனத்துக்கு உரியது. மத்திய அரசு உடனடியாக சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

Related Stories: