திமுகவின் தேர்தல் பரப்புரை பாடலின் காணொலி: பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார்

சென்னை: திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் ”ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப் போறாரு” தேர்தல் பரப்புரைப் பாடலின் காணொலியை வெளியிட்டு விழா நேற்று நடந்தது. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பாடலின் காணொலியை வெளியிட்டார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரைப் பயணத்தின் போது இந்தப் பாடலின் ஆடியோ வெளியான போதே, தமிழக மக்களின் உள்ளங்களைக் கவர்ந்தது. தமிழகத்தின் அவலநிலை மாறி, மீண்டும் வளர்ச்சியை நோக்கிச் செல்ல திமுகவும்,  தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பில் அமர்வதே ஒரே தீர்வு என எடுத்துரைப்பதாக இப்பாடலின் வரிகள் அமைந்துள்ளன. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், தமிழக மக்கள் புதிய விடியலைக் காண்பார்கள் என்ற உறுதியை இப்பாடல் மக்களுக்கு அளிக்கிறது.

Related Stories:

>