பெரியார் சிலை மீது காவி ஆடை: முத்தரசன் கண்டனம்

சென்னை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: தஞ்சை மாவட்டம், ஒரத்த நாட்டில் உள்ள தந்தை பெரியார் சிலை மீது, காவி ஆடை அணிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.

பெரியார் வழி, அண்ணா வழி, அம்மா வழி வந்ததாக கூறிக் கொள்பவர்கள் ஆட்சியில் தொடர்ந்து இத்தகைய இழிவான சம்பவங்கள் நடத்துவது அவமானகரமாகும். த்தகைய சமூக விரோத கும்பலைக் கண்டு அரசு அஞ்சி நடுங்குவது வியப்பளிக்கின்றது. அரசு தொடர்ந்து மௌனம் சாதித்தால், சமூக விரோதிகளுக்கு எதிராக பொது மக்களே சட்டத்தை கையில் எடுக்கும் நிலை ஏற்படும்.

Related Stories:

>