×

நடிகை பலாத்கார வழக்கு: மேலும் 6 மாதம் அவகாசம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: மலையாள  சினிமாவின் முன்னணி நடிகை ஒருவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, இரவில்  காரில் திருச்சூரில் இருந்து கொச்சி  செல்லும் வழியில், ஒரு கும்பலால் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண் நீதிபதி ஹனி வர்க்கீஸ் தலைமையில் கடந்த 2019ம்   ஆண்டு தனி நீதிமன்றம் அமைத்து விசாரணை நடந்து வருகிறது. 6 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம்  தெரிவித்திருந்தது. ஆனால்  கொரோனா பரவல் ஏற்பட்டதால் விசாரணையை முடிக்க மேலும் 6 மாதங்கள் அவகாசம் கோரப்பட்டது.

இந்த நிலையில் நடிகை பலாத்கார வழக்கை முடிக்க, மேலும் 6 மாதங்கள் அவகாசம் கோரி  விசாரணை நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்தது. இந்த மனு நேற்று நீதிபதி கான்வில்கர் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை  முடிக்க தனி நீதிமன்றத்துக்கு மேலும் 6  மாதங்கள் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இனிமேல்  நீட்டிப்பு வழங்கப்பட  மாட்டாது. இதுவே கடைசி வாய்ப்பு எனவும் உத்தரவில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.


Tags : Supreme Court , Actress, rape case, Supreme Court, order
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களின்...