×

உ.பி.யில் 16 வயது சிறுமி சடலமாக மீட்பு

அலிகர்: உத்தரப்பிரதேசத்தில் சிறுமிகள், இளம்பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது.  கடந்த வாரம் தேசிய நெடுஞ்சாலையில் பாதி எரிந்த நிலையில் கல்லூரி மாணவி மீட்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக நேற்று வயலில் இருந்து 16  வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அக்ராபாத் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி மாட்டு தீவனம் எடுத்து வருவதற்காக நேற்று முன்தினம் வயலுக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர்  வீடு திரும்பவில்லை. வயலில் இவர் சடலமாக கிடந்தது தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : U. RB , UP, little girl
× RELATED கொரோனா தடுப்பூசிகளுக்கு பதில் ரேபிஸ்...