×

கோடையில் வெயில் கொதிக்கும்

புதுடெல்லி: ‘வழக்கத்தைவிட நடப்பு கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும்’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பொதுவாக, மார்ச் முதல் மே வரையிலான காலகட்டம் கோடையாக வரையறுக்கப்படுகிறது. தற்போது மார்ச் தொடங்கியுள்ள நிலையில், இந்த  ஆண்டின் வெப்ப நிலவரம் பற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.   

‘வழக்கத்தைவிட இந்த கோடையில் வெப்பநிலை அதிகம் இருக்கும். குறிப்பாக வட இந்தியா, வடகிழக்கு மாநிலங்கள், வடமேற்குப் பகதிகள், கடலோர  மாநிலங்களில் வெப்பம் கூடுதலாக இருக்கும். தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவிலும், நாட்டின் மையப்பகுதிகளிலும் வெப்பநிலை சற்று குறைவாக  இருக்கும்’ என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது.


Tags : Summer, Veil
× RELATED ரயில்வே சீசன் டிக்கெட்டில் தடுப்பூசி...