கல்லூரி மாணவிகளிடம் சில்மிஷம் தனியார் நிறுவன ஊழியர் கைது

வேளச்சேரி: அடையாறு சாஸ்திரி நகரை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி, அடையாறு போலீஸ் துணை கமிஷனர் விக்ரமிடம் புகார் ஒன்றை  அளித்தார். அதில், அடையாறு பகுதியில் நேற்று முன்தினம் தனியாக நடந்து சென்றபோது, பைக்கில் வந்த வாலிபர், தனக்கு பாலியல் ரீதியாக  தொல்லை கொடுத்ததாக தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து சாஸ்திரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரணை  மேற்கொண்டனர். அதில், பூந்தமல்லி ராஜா அக்ரகாரம் பகுதியை சேர்ந்த சரண் (21), என்பது தெரியவந்தது. அவரை நேற்று பிடித்து விசாரித்தனர்.

அதில், இவர் சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, கடந்த 3 மாதங்களாக பூந்தமல்லியில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தில் கலெக்‌ஷன்  ஏஜென்டாக பணியாற்றி வருவதும், தனியாக நடந்து செல்லும் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை குறிவைத்து, பாலியல் சீண்டலில்  ஈடுபட்டு, தப்பி சென்றதும் தெரியவந்தது.

இவர்மீது கடந்த 3 ஆண்டுகளாக, யாரும் புகார் தராத காரணத்தால், தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார்.  இதையடுத்து, அவர் மீது  வழக்குப்பதிவு செய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>