59 மணி நேரம் கேரம் விளையாடி சென்னை வீரர்கள் கின்னஸ் சாதனை

சென்னை: ஆந்திராவைச் சேர்ந்த உஸ்மா சமீரா - அல்லாடா பவன் ஜோடி, 2016ல் தொடர்ந்து 34 மணி நேரம், 45 நிமிடம், 56 வினாடிகள் கேரம்  விளையாடி கின்னஸ் சாதனை படைத்தனர். அந்த சாதனையை முறியடிக்கும் முயற்சியாக சென்னையை சேர்ந்த அஸ்வின் சவுந்தரராஜன் ( 39),  மோகனகிருஷ்ணன் (18) இணைந்து 40 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து கேரம் விளையாடி சாதனை படைக்கும் நிகழ்ச்சி சென்னை சேத்துபட்டில்  கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

சனிக்கிழமை இரவு 35 மணி நேரத்தை கடந்தபோது ஆந்திர ஜோடியை விட 14 நிமிடங்கள் 4 வினாடிகள் கூடுதலாக விளையாடியதால் இருவரும்  கின்னஸ் சாதனை படைத்தனர். அதன் பிறகும் தொடர்ந்து 60 மணி நேரம் விளையாட முடிவு செய்தனர். ஆனால் ஞாயிற்றுக்கிழமை இரவு டாக்டர்கள்  ஆலோசனைப்படி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டனர். அப்போது அவர்கள் 59 மணி நேரம் தொடர்ந்து கேரம் விளையாடி புதிய கின்னஸ் சாதனை  படைத்திருந்தனர். சாதனை வீரர்களை வருமானவரித்தறை முதன்மை ஆணையர் பி.பி.சேகரன், கூடுதல் ஆணையர் நந்தகுமார் பாராட்டினர்.

Related Stories:

>