இன்று முதல் எழும்பூரில் மீண்டும் கைப்பந்து போட்டி

சென்னை, எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி வளாகத்தில் உள்ள கைப்பந்து திடலில் கடந்த ஆண்டு ஏ டிவிஷன் கைப்பந்து போட்டிகள் நடந்து  வந்தன. கொரோனா பரவல் காரணமாக 2020, பிப். 16ல் போட்டிகள் நிறுத்தப்பட்டன. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால், நிறுத்தப்பட்ட  போட்டிகளை மீண்டும் நடந்த சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் முடிவு செய்தது. அதற்கேற்ப ராதாகிருஷ்ணன் ஹாக்கி வளாகத்தில்,  புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி கைப்பந்து திடல் திறக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஏ டிவிஷன் கைப்பந்து போட்டி இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. போட்டிகள் மார்ச் 10ம் தேதி வரை நடக்கும் (4, 8 ஓய்வு  நாள்). இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வருமான வரி, இந்தியன் வங்கி, தமிழக காவல்துறை, இணைப்பு பெட்டித் தொழிற்சாலை, சென்னை சுங்க இலாகா,  பனிமலர் பொறியியல் கல்லூரி, செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, எஸ்ஆர்எம் நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

Related Stories:

>