மேற்கு வங்கத்தில் 8 கட்ட தேர்தலை எதிர்த்து வழக்கு

புதுடெல்லி: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும், அசாமில் 3 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்படும் நிலையில், மேற்கு  வங்கத்துக்கு மார்ச் 27ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 29ம் தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேற்கு  வங்கத்துக்கு மட்டும் ஏன் 8 கட்டங்களாக தேர்தல் என்று திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பி வருகின்றன.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் சர்மா தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அரசியலமைப்பு சட்டம் 14, 21 பிரிவின் விதிமுறையை மீறி  தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு அமைந்துள்ளது. எனவே, இம்முடிவுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தேர்தல்  பிரசாரங்களில் ஜெய் ஸ்ரீராம் உள்ளிட்ட மதம் சார்ந்த கோஷங்கள் எழுப்பவும் தடை விதிக்க மனுவில் கோரப்பட்டுள்ளது.

Related Stories: