கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நசரத்பேட்டை பச்சையப்பன் கல்லூரியில் நேற்று முன்தினம் மாலை நேர வகுப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக  ஒரு மாணவி வந்துள்ளார். அப்போது அதே கல்லூரியை சேர்ந்த பேராசிரியரின் கார், எதிர்பாராத விதமாக மாணவி மீது மோதியது. இதில்  படுகாயமடைந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பின்னர், சென்னை  ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, எலும்பு முறிவு பிரிவில் தீவிர சிகிக்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், படுகாயமடைந்த மாணவிக்கு தரமான, உரிய சிகிச்சை அளிக்க வலியுறுத்தி நேற்று மாலை மாணவர்கள் திடீர் சாலை மறியலில்  ஈடுபட்டனர். அவர்களிடம், விஷ்ணுகாஞ்சி போலீசார் சமரசம் பேசி கலைய செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>