×

திருப்போரூர் கந்தசுவாமி கோயில்: திருக்கல்யாண கோலத்தில் முருகப்பெருமான் வீதியுலா: பிரமோற்சவ விழா நிறைவு

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில், பிரம்மோற்சவத்தில் இறுதிநாளான நேற்று, முருகன் திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி  வள்ளி திருமணம் முடிந்து, சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு கா்ட்சியளித்தார். சென்னை அருகே உள்ள புகழ்பெற்ற முருகன் திருத்தலமான  திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாத பிரமோற்சவ விழா நடைபெறும். இதையொட்டி, இந்தாண்டு பிரம்மோற்சவ விழா,  கடந்த மாதம் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 23ம் தேதியும், 26ம் தேதி சரவணப்  பொய்கையில் தீர்த்தவாரி உற்சவமும், தெப்ப உற்சவமும் நடந்தது.

இந்நிலையில், இறுதி நாள் நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மாலை வேடர்பரி உற்சவம் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை முருகப்பெருமான்  வள்ளியை மணம் முடிக்கும் திருக்கல்யாண உற்சவத்துடன் பிரமோற்சவ விழா நிறைவடைந்தது. இதையடுத்து நேற்று காலை தங்கமயில்  வாகனத்தில் மணக்கோலத்தில் முருகப் பெருமான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள், புதுமண தம்பதிகள்  மணக்கோல முருகனை வழிபட்டனர்.

Tags : Tiruporur Kandaswamy Temple ,Murugapperuman Street ,Thirukalyana ,Golad ,Priamovāmā Festival , Thiruporur, Kandaswamy Temple, Pramorsava Festival, Completion
× RELATED திருவொற்றியூர் வடிவுடையம்மன்...