தேர்தல் நடத்தை விதி அமல்: அரசு அலுவலர்களுக்கு பயிற்சி

காஞ்சிபுரம்: தமிழகத்தில் ஒரே கட்டமாக அடுத்த மாதம், ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு வரும் 10ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதனால் தேர்தல் வேலைகள் பரபரப்பாக நடக்க  தொடங்கியுள்ளன. இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய 4 சட்டமன்றத்  தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது.

எனவே, காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் 21 தேர்தல் ஒருங்கிணைப்பு அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள்,  உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள், பறக்கும் படைகள், காவல்துறை அலுவலர்கள் ஆகியோருடன் தேர்தல்  நடத்தை விதிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில் தேர்தல் நன்னடத்தை விதிகள் மற்றும் தேர்தல் பணிகள் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு, அனைவருக்கும் அறிவுரை வழங்கப்பட்டது.  கூட்டத்தில் எஸ்பி சண்முகப்பிரியா, கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய்  அலுவலர்கள் நாராயணன் (தேசிய நெடுஞ்சாலை), ராஜேந்திரன் (சிப்காட்) , கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பாலமுருகன் உள்பட பலர்  கலந்துகொண்டனர்.

Related Stories:

>