காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும்படை குழு: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும்படை குழு அமைக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் மகேஸ்வரி  ரவிக்குமார் கூறினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் தொடர்பாக நடைபெற்றுவரும் பணிகள் குறித்த  செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போது, கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர்,  ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் கணக்கெடுப்பு நடந்தது.  அதில், ஆலந்தூர் தொகுதியில் 10,244, ஸ்ரீபெரும்புதூரில் 4,747, உத்திரமேரூரில் 5,345, காஞ்சிபுரத்தில் 6,069 என மொத்தம் 26,405 பேர் உள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் விமான நிலைய விரிவாக்கத் திட்ட தனித்துணை ஆட்சியர் சாந்தி ஆலந்தூர் தொகுதி, ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ முத்து மாதவன்,  ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் அலுவலர் சரஸ்வதி, உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆர்டிஓ ராஜலட்சுமி காஞ்சிபுரம் தேர்தல் நடத்தும்  அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 542 மையங்களில் 1872 வாக்குச்சாவடிகள் அமைய உள்ளன. இங்கு, வாக்குப்பதிவு  அலுவலர்களாக சுமார் 8983 பேர், இதர தேர்தல் பணிகளில் சுமார் 2100 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணிகளை கண்காணிக்க 21  தொடர்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரம் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொலைபேசி எண் 044 27236205,  27236206, 27236207, 27236208, இலவச அழைப்பு எண்1800 425 7087 உள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களை இந்த எண்களுக்கு தெரிவிக்கலாம்.  தேர்தல் நடைமுறைகளை கண்காணிக்கவும், தேர்தல் நெறிமுறைகளை கடைப்பிடிக்கவும் 8 வகையான குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் உள்ள ஒவ்வொறு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும்படை குழு வீதம் 4 தொகுதிகளுக்கு 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 நிலையான குழுக்கள் என 4 தொகுதிகளுக்கு 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதிக்கு 1 வீடியோ  கண்காணிப்பு குழு, வீடியோ பார்க்கும் குழு, கணக்கு தணிக்கை குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், உதவி செலவின மேற்பார்வையாளர் குழு,  செலவு  கண்காணிப்பு பிரிவு குழு,  ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு மக்கள் தொடர்பு அலுவலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: