ஆட்டோ டிரைவர் மீது திருநங்கைகள் தாக்குதல்: கோலாரில் பரபரப்பு

கோலார்:   கோலார்-முல்பாகல் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 75ல் உள்ள அராபிகொத்தூர் கிராமத்தில் திருநங்கைகள் தனியாக கூடாரம் அமைத்து தங்கி உள்ளனர். கஞ்சனஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அமரநாராயணசாமி, அவசரம் காரணமாக கூடாரத்தின் அருகில் ஆட்டோவை நிறுத்தி வைத்து சிறுநீர் கழித்துள்ளார்.  இதை பார்த்து ஆத்திரமடைந்த திருநங்கைகள், ஆட்டோ டிரைவரை கடுமையாக தாக்கியதுடன் அவரது ஆட்டோவையும் உடைத்து சேதப்படுத்தினர். இந்த சம்பவம் அராபிகொத்தூர் கிராமத்தினருக்கு தெரிந்ததும், அவர்கள் கூட்டமாக வந்து திருநங்கைகள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த இடம் போர்க்களம் போல் சில நிமிடம் காட்சியளித்தது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கோலார் ஊரக போலீசாரின் கவனத்திற்கு வந்ததும், உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து இரு தரப்பினரை கலைத்தனர், இது தொடர்பாக இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆட்டோ டிரைவர் மீது தாக்குல் நடத்திய புகாரில் சிக்கியுள்ள இரு திருநங்கைகள் தலைமறைவாகியுள்ளதாக தெரியவருகிறது.

Related Stories:

>