வீட்டில் 17 சவரன் கொள்ளை

ஆவடி: ஆவடி அருகே வீராபுரம் கொளஞ்சியம்மன் நகரை சேர்ந்தவர் நாகநேசன் (37). இவரது தந்தை, சமீபத்தில் இறந்துவிட்டார். அவரின் படத்திற்கு  செயின் உள்பட 17 சவரன் நகைகளை அணிவித்திருந்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் ஆட்கள் நடமாடும் சத்தம்கேட்டு நாகநேசன் எழுந்தார். அப்போது ஒரு நபர் வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்தார்.  அதிர்ச்சியடைந்த அவர், தந்தையின் படத்தை கவனித்தபோது 17 சவரன் நகைகளை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. அப்போதுதான் வீட்டின்  கதவை பூட்ட மறந்து தூக்கிவிட்டது தெரிந்தது. புகாரின்படி, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>