வசதியில்லாத 1000 ஏழைகளுக்கு தடுப்பூசி செலுத்த 2.5 லட்சம் வழங்கிய பிரமோதா தேவி

மைசூரு: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்த இரண்டாம் கட்ட முகாம் தொடங்கியுள்ள நிலையில் வசதியில்லாத 1000 ஏழைகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்த 2.50 லட்சம் நிதி வழங்கி மைசூரு ஜேஎஸ்எஸ் மருத்துவமனையில் தடுப்பூசி முகாமை ராஜமாதா பிரமோதா தெவி உடையார் தொடங்கி வைத்தார்.  மைசூரு ஜேஎஸ்எஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து ராஜமாதா பிரமோதா ேதவி உடையார் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தொற்றிலிருந்து  தங்களை தற்காத்து கொள்ள பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். அத்துடன் கொரோனா விதிமுறையை கடைபிடிப்பது முக்கியம். கொரோனா குறித்து யாரும் பயப்பட வேண்டாம்.

தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் இரண்டாம் கட்ட முகாமை தொடங்கி வைத்துள்ளேன். இந்த முகாமில் நான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. முகாமை தொடங்கி வைத்து விழிப்புணர்வை மட்டுமே ஏற்படுத்தியுள்ளேன். எதிர்வரும் நாட்களில் நான் தடுப்பூசி செலுத்தி கொள்வேன்.  தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்கு 250 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணத்தை செலுத்தி கொரோனா தடுப்பூசி ேபாட்டு கொள்ள முடியாத ஏழை மக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்த 2.50 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு 1000 பேருக்கு இலவச தடுப்பூசி செலுத்தப்படும். இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு கொரோனாவிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்’’ என்று கூறினார்.

Related Stories: