கூலிப்படையை ஏவி கணவன் கொலை: மனைவி, மகன் உள்பட 5 பேர் கைது

பெங்களூரு:ராஜகோபாலநகரில் கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி, மகன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு ராஜகோபால்நகர் சரகத்திற்குட்பட்ட ஹக்கனஹள்ளியை சேர்ந்தவர் முகமது ஹங்ஜல் (52). கடந்த பிப்.11ம் தேதி அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த இவர் வெகுநேரமாகியும் எழுந்திருக்கவில்லை. குடும்பத்தினர் அவர் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்ததை பார்த்து நெஞ்சுவலியால் உயிரிழந்ததாக சடலத்தை அடக்கம் செய்தனர். இருப்பினும் அவரது உறவினர்கள் சிலர் முகமது ஹங்ஜல் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி ராஜகோபால்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சந்தேகத்தில் குடும்பத்தினரிடம் விசாரித்தபோது, முகமது ஹங்ஜலை மூச்சு திணறடித்து கொன்றதாக தெரியவந்தது.

இதில் அவரது மனைவியான பேகம் தான் முதற்காரணம் என்று தெரியவந்தது. அதாவது கணவன் முகமது ஹங்ஜலுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில், கணவனை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக தனது மகன் மற்றும் கூலிப்படையின் உதவியை நாடினார். மகனின் ஆலோசனையின்படி கூலிப்படையை சேர்ந்தவர்களுக்கு 4.50 லட்சம் பணம் கொடுத்து, கணவனை கொலை செய்யும்படி கூறினார். இதற்காக பிப்.10ம் தேதி இரவு உணவில் மயக்க மாத்திரைகளை குடும்பத்தினர் கலந்து கொடுத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து பேகம் அவரது மகன் மற்றும் கூலி படையினர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: