×

விதிமீறி விளம்பரம் 55 வழக்குகள் பதிவு

திருவள்ளூர்: சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து பொது இடங்களில்  அரசியல் கட்சிகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் மற்றும் கொடி கம்பங்கள் எதுவும் இருக்கக்கூடாது என தேர்தல் விதிமுறை உள்ளது.  இந்நிலையில், தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், அரசியல் கட்சிகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள், சுவர் விளம்பரங்கள்,  கொடிக்கம்பங்கள் ஆகியவற்றை அரசு அலுவலர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், கெடுபிடிகளையும் மீறி கட்சி  தலைவர்களின் பேனர்களை வைப்பதன் மூலம் பல்வேறு விதிமுறை மீறல்களில் நடக்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பொது இடத்தில் தேர்தல் விதிமுறை மீறும் வகையில்  திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, திருத்தணி, பொன்னேரி,  கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் டிஜிட்டல் விளம்பர பேனர் வைத்ததாக அரசியல் கட்சியினர் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது 55 வழக்கு  பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Irregular advertising, lawsuits, registration
× RELATED விதிமீறி விளம்பரம் 55 வழக்குகள் பதிவு