அரசு பள்ளிகளில் உள்ள 63 சதவிகிதம் கழிவறைகள் பயன்படுத்த தகுதியற்றவை: ஆய்வில் தகவல்

பெங்களூரு:  கொரோனா தொற்று பரவல் பொதுமக்களிடையே அச்சம் மட்டுமின்றி சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக அனைவரும் தூய்மையை கடைப்பிடிக்க விரும்புகிறார்கள். தொடர்ந்து அரசு தரப்பிலும் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக பள்ளிகள் மூட்டப்பட்டிருந்தது. எனவே தற்போது பள்ளிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்ட பள்ளிக்கல்வித்துறை அதன் படி அதிகாரிகளை பள்ளிகளுக்கு அனுப்பி ஆய்வு செய்தது. இதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சுமார் 63 சதவீதம் பள்ளிகளில் உள்ள கழிவறைகள் மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என தெரியவந்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலைவாய்ப்பு திட்ட நிதியைப் பயன்படுத்தி அரசு பள்ளிகளில் நல்ல கழிப்பறைகளை கட்ட கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டதை அடுத்து பணிகள் மேற்கொள்ளப்படும் என கல்வித்துறை ஆணையர் வி அன்புகுமார் கூறினார்.

 

அமைச்சர் சுரேஷ்குமார் கூறியிருந்ததாவது, கழிப்பறைகளை மேம்படுத்த மாவட்ட அதிகாரிகளுடன் தரவை பகிர்ந்து கொள்வோம், வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் அரசுப்பள்ளிகளுக்கு ஸ்வாச்சா ஷவுச்சலயா உத்தமா ஷேல் என்ற புதிய திட்டத்தை நாங்கள் முன்மொழிந்தோம். உள்கட்டமைப்பு மற்றும் கழிப்பறைகளை பராமரிப்பதற்கான நிதி அதிகரிப்பது இதில் அடங்கும். உள்ளாட்சி அமைப்புகளிடம் பராமரிப்பை ஒப்படைக்க ஒரு திட்டம் உள்ளது. இந்த திட்டத்தை முதலமைச்சர் பரிசீலிப்பார் என்று நான் நம்புகிறேன்’’ என அமைச்சர் தெரிவித்தார்.

ரெய்ச்சூரில் மோசம்

பல ஆண்டுகளாக பள்ளி கழிப்பறை வசதிகள் தொடர்பாக பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் பணிபுரியும் ஆர்வலர் அர்ச்சனா கூறுகையில், ``ரெய்ச்சூர், கலபுர்கி, பெங்களூரு வடக்கு, மண்டியா, ஹூப்பள்ளி மற்றும் பாகல்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள அரசு பள்ளிகளில் மிக மோசமான கழிப்பறைகள் உள்ளன. நன்கொடையாளர்களின் ஈடுபாட்டின் காரணமாக தெற்கு பெங்களூரு அரசு பள்ளிகள் ஒப்பீடுகையில் சிறந்த வசதிகளைக்கொண்டுள்ளன’’ என தெரிவித்தார்.

Related Stories: