காயத்துடன் வந்த கேரள பெண் புலிக்கு மைசூருவில் சிகிச்சை

சாம்ராஜ்நகர்:கேரள வனப்பகுதியிலிருந்து பண்டிபுரா வனப்பகுதிக்குள் காயத்துடன் நுழைந்த பெண் புலி கூண்டில் சிக்கியதையடுத்து அதை மீட்டு வனத்துறையினர் சிகிச்சைக்காக மைசூரு உயிரியல் பூங்காவில் சேர்த்தனர்.  கேரள எல்லையான வயநாடு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து சுமார் 8 முதல் 10 வயதுடைய பெண் புலி ஒன்று உடலில் காயத்துடன் கடந்த ஜனவரி மாதம் கர்நாடக எல்லையான பண்டிபுரா வனப்பகுதிக்குள் நுழைந்தது. இதை சிசிடிவி கேமரா மூலம் கண்டறிந்த வனத்துறையினர் காயமடைந்த புலியை பிடித்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். இதையடுத்து வனப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் புலியை பிடிக்க கூண்டு வைத்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இந்த புலி குண்ட்ரே வனப்பகுதியில் சுற்றித்திரிவதை கண்ட வனத்துறை ஊழியர்கள் புலியை பிடிக்க கூண்டு வைத்தனர். இந்த கூண்டில் பெண் புலி சிக்கியது. பலவீனமான முறையில் இருந்த இந்த புலியை  மீட்ட வனத்துறையினர் சிகிச்சைக்காக மைசூரு உயிரியல் பூங்காவில் சேர்த்தனர்.

Related Stories: