உதிரிபாகங்கள் விலை உயர்வை கண்டித்து பொக்லைன் இயந்திர உரிமையாளர்கள் போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மண் அள்ளும் இயந்திரங்கள் உள்ளது. இந்த இயந்திரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு  இதுவரை 800 என்று வாடகை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது டீசல் மற்றும் உதிரிபாகங்கள் விலையேற்றத்தின் காரணமாக 1000  என வாடகையை நிர்ணயம் செய்யக்கோரி திருவள்ளூரில் மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் மாநில தலைவர்  ஜெ.விவேக் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்களை நிறுத்தி வைத்து உரிமையாளர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், மாவட்ட தலைவர் தீனதயாளன், மாவட்ட பொருளாளர் எஸ்சிபி.பாலாஜி, மாவட்ட துணை தலைவர் டி.சந்தோஷ், டி.கே.தியாகராஜன்,  ஜி.மொராஜ், சௌவுக்கர் பாண்டியன், வெங்கட், பாண்டியன், சதீஷ், மகேந்திரன், மோகு, தினேஷ், மோகன், ஜானகிராமன், செல்வராஜ், சுரேஷ் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் மூத்த தலைவர் சைதை எம்.எஸ்.மணி தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ரவிராஜா,  நலச்சங்க மாநில நிர்வாகிகள் குணசேகரன், அத்திப்பட்டு எம்.கார்த்திகேயன், முகமது பயாஸ், ஊத்துக்கோட்டை பரந்தாமன் ஆகியோர் கோரிக்கையை  வலியுறுத்தி பேசினர். ஊத்துக்கோட்டை: தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் டீசல், பெட்ரோல் மற்றும்  பொக்லைன் இயந்திர உதிரி பாகங்கள் விலை ஏற்றத்தை கண்டித்து ஊத்துக்கோட்டை அருகே சீத்தஞ்சேரி கிராமத்தில் ஒரு நாள்  அடையாள வேலை  நிறுத்த போராட்டம் நடந்தது.

இதில், மாநில தலைவர் கத்திப்பாரா விவேக் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்  பரந்தாமன், மாவட்ட நிர்வாகிகள் விஸ்வநாதன்,  தீனதயாளன், பாலாஜி, ரவிராஜன் கார்த்திக், மணலி பாண்டியன், அமிர்ஜான், ரமேஷ், யுவராஜ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில்  டீசல், பெட்ரோல் மற்றும் பொக்லைன் இயந்திரங்களின் உதிரி பாகங்களின் விலை உயர்வை கண்டிப்பது  மற்றும் நாளை முதல் பொக்லைன்  இயந்திரத்தின் வாடகை 1 மணி நேரத்திற்கு 1000ஆக உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முடிவில், ரவி நன்றி கூறினார்.

பொன்னேரி: பொன்னேரியில் பொக்லைன் இயந்திர உரிமையாளர்கள், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று பொக்லைன் இயந்திரங்களை பழைய  பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தினந்தோறும் பன்மடங்கு உயர்ந்து வரும்  டீசல் விலை உயர்வால்   தங்களது வாழ்வாதாரம் பாதிக்கிறது. இயந்திர உதிரிபாகங்கள் விலையேற்றம், போன்றவற்றால் தங்களது வாகனங்களுக்கு மாத தவணை கூட  செலுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. பொக்லைன் இயந்திரங்களின் வாடகையை 1 மணி நேரத்திற்கு 800லிருந்து 1000மாக உயர்த்தி  அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Related Stories:

>