டூல்கிட்ட விவகாரத்தில் சிக்கிய நிகிதா ஜேக்கப் முன்ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு: இன்று விசாரணைக்கு வருகிறது

புதுடெல்லி: விவசாயிகள் போராட்டம் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்பிய டூல்கிட் விவகாரத்தில், திசா ரவியுடன் குற்றம்சாட்டப்பட்ட நிகிதா ஜேக்கப் முன்ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லகைளில் திரண்டு விவசாயிகள் மூன்று மாதங்களாக தொடர் போரட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் குறித்து தகவல் தெரிவிக்கும் டூல்கிட் ஆவணத்தை சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக டெல்லி போலிசார் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக பெங்களூருவை சேர்ந்த சூழலியல் ஆர்வலர் திசா ரவி என்பவரை கைது செய்தனர். அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த டூல்கிட் விவகாரத்தில் திசா ரவியுடன் இணைத்து குற்றச்சாட்டப்பட்டவர்களில் மும்பையை சேர்ந்த நிகிதா ஜேக்கப் என்பவரும் அடங்குவார்.  

இவர் ஏற்கனவே, டூல்கிட் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள டெல்லியில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை  அணுகுவதற்கான வழிகாட்டுதலுடன் பிப்ரவரி 17 அன்று பம்பாய்  உயர்நீதிமன்றத்தில் இருந்து மூன்று வாரங்களுக்கு டிரான்சிட் ஜாமீன் பெற்றார். தற்போது, முன்ஜாமீன் வழங்க கேட்டு டெல்லி செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு கூடுதல் செசன்ஸ் நீதிபதி  தர்மேந்தர் ராணாவின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories: