அரசின் மானிய சலுவை பட்டியலில் டாடா நெக்சான் எல்கட்ரிக் கார் நீக்கம்: டெல்லி அரசு உத்தரவு

புதுடெல்லி: டாடா நெக்சான் நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார், அரசின் மானிய பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி அரசு எலக்டிரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது. இதற்காக, இ-வாகனங்களுக்கு மாற விரும்புவோருக்கு மானியங்களை வழங்கி வருகிறது. மேலும், எந்தெந்த நிறுவனங்களின் மாடல் கார்களுக்கு அரசின் மானியங்கள் வழங்கப்படுகிறது என்பற்கான ஒரு பட்டியலையும் அரசு தயாரித்து பொதுமக்களின் பார்வைக்கு வழங்கியுள்ளது. அந்த பட்டியலில் டாடா நிறுவனத்தின் நெக்சான் காரும் இடம் பெற்று இருந்தது. ஆனால், இந்த ரக கார் பேட்டரியை ஒருமுறை சார்ஜிங் செய்தால் 312 கிலோ மீ்ட்டர் வரை செல்ல முடியும் என வாக்குறுதி அளித்தது டாடா நிறுவனம். எனினும், இந்த வாக்குறுதியை இந்த ரக கார் பூர்த்தி செய்யவில்லை என கூறி, நெக்சான் காரை வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர் அரசிடம் புகார் தெரிவித்தார்.

அதையடுத்து, டர்டா நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு அரசு நோட்டீஸ் அனுப்பியது. இதன்தொடர்ச்சியாகவே தற்போது, அரசின் மானிய பட்டியலிலிருந்து டாடா நெக்சான் காரை நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: