கூகுள் வரைப்படத்தின் உதவியை கொண்டு இருப்பிடத்தை பகிர்ந்து கொள்ள கிளப், ஓட்டல்களுக்கு உத்தரவு: கலால் துறை அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் 1,000 ஓட்டல்கள், கிளப்கள், மற்றும் ரெஸ்ட்ரோ-பார்கள் கலால் துறையின் உரிமம் பெற்று வாடிக்கையாளர்களுக்க மதுபானம் விநியோகம் செய்து வருகின்றன. இதுபோன்ற அனைத்து கிளப்கள், ஒட்டல்களின் உரிமையாளர்களுக்க கலால் துறை அதிகாரிகள் சுற்றறிக்கை ஒனறை அனுப்பியுள்ளனர். அதில், கூகுள் வரைபடத்தின் உதவியை கொண்டு தங்கள் கடைகளின் இருப்பிடம் தொடர்பான தகவல்களை அனுப்ப வேண்டும். இந்த நடவடிக்கை, குறிப்பிட்ட கடையின் புவியியல் இருப்பிடத்தை குறிப்பிட்ட பகுதியில் அறிய உதவும். டிஜிட்டல் முறையில் இந்த கடைகளின் இருப்பிடத்தை இதன்முலம் எளிதில் அடையாளம் காண இயலும். டிஜிட்டல் தரவுகள் எங்களிடம் சேமிக்கப்படும்பட்சத்தில், அது சார்ந்த பல முடிவுகளை விரைந்து எடுக்கவும் உதவும். குறிப்பாக, கலால் கொள்கைகளை வரையறுப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கும். கலால் துறையின் சீரமைப்பின் ஒர பகுதியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: