காவலர் பணியிடங்களுக்கான உடல்தகுதி தேர்வு ஏப்.12ல் நடைபெறும்: தேர்தலால் தள்ளிவைப்பு

சென்னை: சட்டமன்ற தேர்தல் பணிக்காக வரும் 8ம் தேதி நடைபெற இருந்த காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு, ஏப்ரல் 12ம் தேதி நடைபெறும் என்று சீருடைப்பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது. தமிழக காவல் துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 11,813 இடங்களுக்கான எழுத்து தேர்வு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி தமிழகம் முழுவதும் 37 மாவட்ட தலைநகரங்களில் நடந்தது. இந்த தேர்வை 5,50,314 பேர் எழுதினர். எழுத்து தேர்வுக்கான முடிவு கடந்த 19ம் தேதி சீருடைப்பணியாளர் தேர்வு குழும இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, அடுத்த கட்டமாக அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடல் கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு மற்றும் உடல் திறன் போட்டி நடைபெற உள்ளது. இந்த தேர்வு 1:5 விகிதத்தில் வரும் 8ம் தேதி முதல் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்தது. சட்டமன்ற தேர்தல் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதால் வரும் 8ம் தேதி நடைபெற இருந்த உடல் தகுதி தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 12ம் தேதி முதல் நடைபெறும் என்று சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.

Related Stories: