மநீம வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை முடுக்கிவிட்டுள்ளது. இதற்காக மக்கள் நீதி மய்யம் சார்பில், விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டது. தற்போது அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி நிறுவனர் கமல்ஹாசன், நேற்று நேர்காணலை தொடங்கினார். இதில் முதல்கட்டமாக செயற்குழு, நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் கமல்ஹாசன் நேர்காணல் நடத்தினார். அடுத்தடுத்த நாட்களில் மாவட்டம் வாரியாக நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே ஐஜேகே மற்றும் சமத்துவ மக்கள் கட்சியை தங்களது கூட்டணியில் இணைக்க கமல்ஹாசன் முடிவு செய்து அக்கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

Related Stories:

>