பேச்சுவார்த்தை எதிரொலி ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம்: எம்டிசி உத்தரவு

சென்னை: இடைக்கால நிவாரணமாக ரூ.1,000 பிப்ரவரி மாதம் முதல் பிரதி மாதமும் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும் என எம்டிசி அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநகர் போக்குவரத்துக்கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையானது இதுவரை இரண்டு கட்டங்களாக நடந்துள்ளது. இந்நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவித்துள்ளபடியும், போக்குவரத்துத்துறை செயலாளரின் கடித படியும் தகுதியுடைய ஒவ்வொரு போக்குவரத்து தொழிலாளர்களுக்கும், இடைக்கால நிவாரணமாக ரூ.1,000 பிப்ரவரி மாதத்தில் இருந்து பிரதி மாதமும் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும். இவ்வாறு வழங்கப்படும் இடைக்கால நிவாரண தொகை 14வது ஊதிய ஒப்பந்தம் அமல்படுத்தும்போது பணியாளர்களுடைய சம்பளக் கணக்கில் பின்னர் சரிசெய்யப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: