ரயில்வே, பத்திரிகையாளருக்கு தபால் வாக்கு: ஆணையம் அறிவிப்பு

சென்னை: ரயில்வே ஊழியர்கள், விமான போக்குவரத்து, கப்பல் துறை, ஊடகத்துறை போன்ற அத்தியாவசிய பணியில் ஈடுபடுபவர்கள் தபால் வாக்கு செலுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரயில் ஓட்டுனர்கள், ரயில் ஓட்டுனரின் உதவியாளர்கள், டிக்கெட் பரிசோதகர், ஏசி கோச் உதவியாளர்கள், ஆர்.பி.எப் ஊழியர்கள் வான் வழி போக்குவரத்து ஊழியர்கள், கப்பல் துறையினர், மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊடகத்துறையினர் பலர் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் இருப்பதாக அரசுக்கு தெரியவந்தது. அதன்படி மேற்கண்ட அத்தியாவசிய பணியில் ஈடுபடுவர்களுக்கு தேர்தல் ஆணையம் தபால் வாக்கு அளிக்க சட்டத்தின் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்காக நோடல் அலுவலர் நியமிக்கப்பட்டு அவர் இதனை நடத்துவார். மேலும் விபரங்களுக்கு election.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

Related Stories:

>