திருப்பூரில் கொள்ளையடிக்கப்பட்ட ஏ.டி.எம். இயந்திரம் சிதறிய நிலையில் மீட்பு

பெருந்துறை: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே கூலிபாளையம் பகுதியில் பாங்க் ஆப் பரோடா வங்கி ஏ.டி.எம். மையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை புகுந்த கொள்ளையர்கள் இயந்திரத்தை உடைக்க முடியாததால், ஏ.டி.எம் இயந்திரத்தை பெயர்த்து வாகனத்தில் இழுத்து சென்றனர். நேற்று முன்தினம் விஜயமங்கலம் தேசிய நெடுஞ்சாலை அருகே மூங்கில்பாளையம் பிரிவு என்ற இடத்தில் கேட்பாரற்று நின்ற காரை நேற்று போலீசார் மீட்டனர். இந்நிலையில், நேற்று பெருந்துறை அருகே சரளை என்ற இடத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தை போலீசார் கண்டுபிடித்தனர். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் காலி நிலத்தில் உடைக்கப்பட்டு சிதறி கிடந்த ஏ.டி.எம். இயந்திர பாகங்களை போலீசார் மீட்டு விசாரணை செய்து வருகின்றனர். ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூ.2 லட்சத்துக்கும் குறைவான தொகையே இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Related Stories:

>