பட்டப்பகலில் கத்தி முனையில் செயின் பறிப்பு

தங்கவயல்:தங்கவயலில் டூ வீலரில் சென்ற பெண்னை மடக்கி கத்தி முனையில் மிரட்டி கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தங்கவயல் தாலுகா கட்ட மாத மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சாலினி. இவர் பகல் 2 மணியளவில்  தன் தந்தை ஆஞ்சப்பாவுடன் டூ வீலரில் சென்று கொண்டிருந்தார். மதிநாயக்கனள்ளி ஏரி அருகே வந்த போது, இரண்டு டூ வீலரில் வந்த நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் அவர்களை தடுத்து நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டியது. பிறகு சாலினியை டூ வீலரில் இருந்து கீழே தள்ளி அவர் கழுத்தில் இருந்த 27 கிராம் தங்க சங்கிலியை பறித்து கொண்டதுடன் மொபைல் போன்,  மற்றும் ₹400 ரொக்கம் இருந்த பர்ஸ் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி சென்றது. இதன் மொத்த மதிப்பு 1,10,000. இது குறித்து பேத்தமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>