ஆதாரங்களுடன் ரூ.50,000 மேல் பணத்தை எடுத்துச் செல்லலாம்: ஆதாரமில்லாததை ஆணையம் பறிமுதல் செய்யலாம்...ஐகோர்ட் உத்தரவு.!!!

சென்னை: தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடந்த 26-ம் தேதி அறிவித்தார். தொடர்ந்து, சென்னையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. 50,000 ரூபாய்க்கு அதிகமாக பணம் வைத்திருந்தால் ஆவணங்கள் காண்பிக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமான பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பணப்பட்டுவாடா புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதற்கிடையே, தேர்தல் நடத்தை விதிகளில், ரூ15 லட்சம் வரை கொண்டு செல்ல அனுமதி கோரி கேவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, உரிய ஆதாரங்களை காட்டி ரூ.50,000 மேல் பணத்தை எடுத்துச் செல்லலாம் என்றும் ஆதாரங்களைக் காட்டாவிட்டால் பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்யலாம் என்றும் உத்தரவிட்டு கேவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Related Stories:

>