அரிசி எங்கிருந்து வந்தது?

இந்தியாவில் அதிகம் உற்பத்தியாகும் உணவுப் பொருள் அரிசிதான். வட இந்தியர்கள் பிரதானமாக கோதுமைதான் சாப்பிடுகிறார்கள் என்று நாம் நினைக்கிறோம். தென்னிந்தியாவைப் போலவே வட இந்தியாவிலும் அதிகமாக உட்கொள்ளப்படுவது அரிசிதான். ஆனால் -நெல்லின் பூர்வீகம் இந்தியா அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் முதன் முதலில் பயன்பாட்டுக்கு வந்தது சீனாவில்தான். மனிதன் விவசாயத்தைக் கண்டுபிடித்த ஒரு சில நூற்றாண்டுகளிலேயே நெல்லின் பயன்பாட்டையும் கண்டறிந்திருக்கக்கூடும் என்கிறார்கள் ஆயவாளர்கள். சுமார், 12,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட நெல்லின் பாசில் படிமங்கள் சீனாவில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து சீனாவின் நதிக்கரைகள்தான் நெல்லின் தாய்மடி என்று முடிவு செய்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். அங்கிருந்து சுமார் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கும் தெற்காசியாவின் பிற பகுதிகளுக்கும் பரவிய நெல், கடந்த இரண்டாயிரம் வருடங்களாகத்தான் உலகம் முழுதும் பரவியிருக்கிறது என்கிறார்கள். இந்தியாவின் பழமையான நாகரிகத்தைச் சொல்லும் சிந்து, சமவெளி நாகரிகங்களில்கூட நெல்லின் பயன்பாடு இருந்திருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Related Stories:

>