×

டெலிபோன் டைரக்டரியின் கதை!

டெலிபோன்கள் புழக்கத்துக்கு வருவதற்கு முன்பே டைரக்டரி புழக்கத்துக்கு வந்து விட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் ‘சிட்டி டைரக்டரி’ என்கிற பெயரில் பிரபலமானவர்களின் முகவரியை அச்சடித்து வினியோகிக்கும் வழக்கம் துவங்கி விட்டது. உலகின் முதல் டெலிபோன் டைரக்டரியை அச்சடித்த புகழ் அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தின் நியூ ஹேவன் நகரையே சாரும். அந்நகரில் தொலைபேசி வைத்திருப்பவர்கள் பெயர் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் அச்சடிக்கப்பட்டிருந்த இதில் வெறும் ஐம்பது பெயர்களே இருந்தன.
இரண்டு ஆண்டுகள் கழித்தே லண்டனில் 248 பெயர்கள் கொண்ட டெலிபோன் டைரக்டரி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த டைரக்டரி இன்றும் லண்டனில் பாதுகாக்கப்படுகிறது.
‘யெல்லோ பேஜஸ்’ எனப்படும் மஞ்சள் பக்கங்கள் 1886ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் வெளியிடப்பட்டது. ஒருக்கட்டத்தில் எலெக்ட்ரானிக் டெலிபோன் டைரக்டரிகள் எல்லாம் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் புகழ்பெற்றிருந்தன. 1996ம் ஆண்டு முதன் முதலில் டெலிபோன் டைரக்டரிகள் ஆன்லைன் ஆகின.இரண்டாயிரங்களுக்குப் பிறகு டெலிபோன் டைரக்டரிகள் அச்சடிக்க ஏராளமான பேப்பர் தேவைப்படுகிறது. இதற்காக லட்சக்கணக்கான மரங்களை வெட்ட வேண்டியிருக்கிறது. இது சுற்றுச்சூழலுக்கு அபாயம் என்று கருதப்பட்டது. சில அமெரிக்க மாகாணங்கள் டைரக்டரிகளுக்குத் தடைகூட விதித்தன. இன்று டெலிபோன் டைரக்டரி என்பதன் புழக்கமே கிட்டத்தட்ட அருகிவிட்டது. நம்முடைய ஒவ்வொருவரின் செல்போனும்தான் இன்று டெலிபோன் டைரக்டரி.



Tags : டெலிபோன் டைரக்டரி
× RELATED 52% மாணவர்கள் செல்போன்களை கற்றலுக்கு...