ரூ.1000-க்கு விற்கும் சிறப்பு டீ

கொல்கத்தாவின் முகுந்தபூரில் நிர்ஜாஷ் என்ற ஒரு சிறிய தேநீர் கடையில் ஒரு கப் டீ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அங்கு குடைகள் தான் கடையின் கூரையே, மற்றும் வாடிக்கையாளர்கள் அமர்வதற்கு சில பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. இந்த டீ ஸ்டாலில் மொத்தம் 4 விலையுயர்ந்த டீ வகைகள் விற்பனை செய்யப்படுகிறதாம். இந்த சிறிய ஸ்டாலில் 100-க்கும் மேற்பட்ட விதவிதமான வகைகளில் தேநீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் விற்கப்படும் அனைத்து வகையான டீக்களும் இங்கு கிடைக்கின்றன. இங்கு ஒரு கப் தேநீரின் விலை ரூ.12ல் தொடங்கி ரூ.1000 வரை விற்கப்படுகிறதாம். அப்படி என்ன ஸ்பெஷல் என்று கேட்டால், உண்மையில் இங்கு விலையுர்ந்த வெரைட்டிகளில் டீக்கள் போடப்படுகிறது. அதாவது உடல் பருமனை குறைக்க உதவும் போ-லே டீ (Bo-Lay Tea), இந்த சீன டீத்தூள் வாங்க கிலோவுக்கு ரூ.3 லட்சத்திற்கு மேல் செலவாகும் என்று கூறப்படுகிறது.

Related Stories:

>