×

காரின் சாவியை பிடுங்கி, ராஜேஷ் தாஸூடன் பேசுமாறு பெண் எஸ்.பி.யை வற்புறுத்தியதாக செங்கல்பட்டு எஸ்.பி மீது புகார்

சென்னை: பெண் எஸ்.பி கார் சென்னைக்குள் நுழைவதை அதிரடி படையுடன் சென்று செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் தடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு டோல்கேட்டில் 100க்கும் மேற்பட்ட காவலர்களுடன் சென்று பெண் எஸ்.பி காரை மறித்ததாக நாளிதழில் செய்தி வெளியானது.

உயர் அதிகாரி உத்தரவுப்படி பெண் எஸ்.பி.யின் காரை தடுத்ததாக கண்ணன் விளக்கமளித்திருந்தார். பெண் எஸ்.பி காரின் சாவியை பிடுங்கி வாக்குவாதம் செய்ததாக செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னைக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என்று மேலிடம் உத்தரவிட்டதாக கண்ணன் விளக்கமளித்தார். அதிரடி படை போலீசாரை குவித்து பெண் எஸ்.பி காரை தடுத்தது பலத்த சர்ச்சையை கிளப்பியது.

காரின் சாவியை பிடுங்கி, ராஜேஷ் தாஸூடன் பேசுமாறு பெண் எஸ்.பி.யை வற்புறுத்தியதாக கண்ணன் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி ஆகியோர் 2 வாரத்தில் பதில் தர மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பரனூர் சுங்கச்சாவடியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பெண் எஸ்.பி.யை தடுக்க முயற்சி நடந்தது. சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ், கண்ணன் மீதான வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும். ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியே புகார் கொடுக்க அலைக்கழிக்கப்பட்டுள்ளார் என்றால் பெண் எஸ்ஐ, பெண் கான்ஸ்டபிளின் நிலையை யோசிக்க முடியவில்லை.

விசாரணை குறித்து அவ்வப்போது அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். ஒரு பெண் எஸ்.பி.க்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை என்பதால் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்துள்ள வழக்கை தலைமை நீதிபதி உரிய அமர்வுக்கு மாற்றுவார் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ராஜேஷ் தாஸ், எஸ்.பி.கண்ணன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 354A(2), 341, 506(1) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Rajesh Dasutu ,RB Sepepalpu S. ,B. , SP, DGP
× RELATED கைத்தறி நெசவுத்தொழிலை மேம்படுத்த தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும்