சென்னையில் 2 சுங்கச்சாவடிகளில் 50% சுங்கக்கட்டணம் - மறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை: சென்னையில் 2 சுங்கச்சாவடிகளில் 50% கட்டணம் வாங்க வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்தின் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 50% கட்டணம் வசூலிக்கப்படுவதால் நாளொன்றுக்கு ரூ.16 லட்சம் இழப்பு என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மனு தாக்கல் செய்திருந்தது.

சென்னையை அடுத்த மதுரவாயல் முதல் வாலாஜா வரை தேசிய நெடுஞ்சாலை முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற கடிதத்தின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. மேலும் பழுதடைந்த நிலையில் உள்ள மதுரவாயல் - வாலாஜா நெடுஞ்சாலையை பல நாட்களாக ஏன் சரிசெய்யவில்லை? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

மதுரவாயல் - வாலாஜா இடையே சாலையில் 2 சுங்கச்சாவடிகளில் 50% கட்டணம் வசூலிக்க உத்தரவிடப்பட்டது. குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை எப்போது சரி செய்வீர்கள்? பணி எப்போது முழுமைபெறும் என கேள்வி எழுப்பினர். சாலைகளில் கண்துடைப்புக்காக மட்டுமே பராமரிப்பு பணி நடைபெற்றதாக குற்றம்சாட்டி மதுரவாயல் - வாலாஜா இடையே 2 சுங்கச் சாவடிகளில் 50% கட்டணம் வசூலிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

Related Stories: