சட்டமன்ற தேர்தலில் பறக்கும் படையினருடன் பணிபுரியும் காவலர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தல்

டெல்லி: சட்டமன்ற தேர்தலில் பறக்கும் படையினருடன் பணிபுரியும் காவலர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தல் அனுப்பியுள்ளது. காவலர்கள் தன்னிச்சையாக சோதனையில் ஈடுபட கூடாது. காவலர்கள் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. காவலர்கள் கட்டாயம் முழு சீருடையில் பணியில் இருக்க வேண்டும். தணிக்கையின் போது அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும். தணிக்கையின் போது சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Related Stories:

>