கம்பம் சுருளி அருவியில் குளிக்க திடீர் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கம்பம்: சுருளி அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள சுற்றுலா தலமான சுருளி அருவி கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் மூடப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதிலும் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 11 மாதங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி 26ஆம் தேதி நீக்கப்பட்டது.

ஒரு மாதமே ஆன நிலையில் அருவியில் நீராட வனத்துறையினர் திடீரென அனுமதி மறுத்தது சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. குளிப்பதற்கு தடை விதித்துள்ளதால ஆர்ப்பரித்து கொட்டும் அருவியை மட்டுமே கண்டு ரசிக்கும் நிலை உள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் ஏமாறுவதை தடுக்க முன்கூட்டியே அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: